சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள சில மாணவர்களை கைது பொலிஸார்!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள சில மாணவர்களை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி பயிலும் நான்கு மாணவர்கள் பாலியல் ரீதியான உறவு கொண்டு அதனை காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வயதான இளைஞன் ஒருவனுடன் இணைந்து இந்த நான்கு மாணவர்களும் மோசமான செயலை மேற்கொண்டுள்ளனர்.

கம்பளை - அம்புலவாவ என்னும் பகுதியில் கஞ்சா புகை பிடித்துக் கொண்டு, மாணவர்கள் தங்களுக்கு இடையில் பாலியல் ரீதியாக தகாத உறவு கொண்டிருந்த வேளையில் பொலிஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்து மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.

பாடசாலை சீருடையில் இந்த மாணவர்கள் இருந்தனர் எனவும், மாணவர்களிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பொலிஸார், நேற்று முன்தினம் குறித்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

மாணவர்களின் செல்லிடப்பேசிகளை பரிசோதனையிட்ட போது அவற்றில் குறித்த மாணவர்கள் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளும் காட்சிகள் காணொளியாக பதிவிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்ற உள்ள காரணத்தினால் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பொலிஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த மாணவர்களும் மேலும் பல மாணவர்களும் அம்புலுவாவ காட்டுப் பகுதியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகளில் அடிக்கடி ஈடுபடுகின்றனர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி