ஆடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடித்தது உண்மை தான்: இளைஞன் வாக்குமூலம்

அழகி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர், பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவைச் சேர்ந்த இளம்பெண் மான்சி தீக்‌ஷித்(20). மொடலிங் ஆசையில் இருந்த இவருக்கு பேஸ்புக் மூலம் சையத் (19) என்பவர் நண்பராக அறிமுகமானார்.

ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு வந்த சையத், தன்னை புகைப்பட கலைஞர் என்றும் தன்னிடம் புகைப்படம் எடுத்த பலர் இப்போது மொடலிங்கில் சிறந்து விளங்குவதாகவும் மான்சியிடம் கூறியுள்ளார்.

அத்துடன் மும்பை அந்தேரி பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு மான்சியை அழைத்த சையத், அவரிடம் புகைப்படம் எடுப்பது குறித்து பேசியுள்ளார்.பின்பு உடைகளை மாற்றி வருமாறு கூறிய சையத், தான் மறைத்து வைத்திருந்த கமெரா மூலமாக மான்சி உடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்தே போட்டோஷூட் செய்வது போல் அவர் ஏமாற்றியது மான்சிக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் கோபமடைந்த மான்சி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சையத் குறித்து பொலிசில் புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

அப்போது மான்சியை உறவுக்கு அழைத்த சையத், அதற்கு அவர் மறுத்தால் உடை மாற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டபோது, மான்சியை பிடித்து இழுத்து கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

அவரது உடலை சூட்கேஸில் போட்டு அடைத்த சையத், அதனை ஆட்டோ ஒன்றில் கொண்டு சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகின.இந்நிலையில், பொலிசாரிடம் சிக்கிய சையத் விசாரணையில் முதலில் அளித்த வாக்குமூலத்தில் கூறிய தகவல் இதோ;

வீட்டுக்கு வந்த மான்சியை தகாத உறவில் ஈடுபட அவரை அழைத்தேன். அவர் மறுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர் கோபமாக பேசியதால், அருகில் இருந்த ஸ்டூலை எடுத்து தாக்கினேன். அவர் மயக்கமானார். பிறகு பயந்துபோய், தண்ணீரை தெளித்து உசுப்பினேன்.

அவர் மயக்கம் தெளிந்தது. சிறிது நேரத்தில் அம்மா வந்து கேட்டால் என்ன சொல்வது என்று பயம் ஏற்பட்டது.

இதனால் கொலை செய்ய முடிவு செய்து, கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்றேன்.

பிறகு சூட்கேஸுக்குள் உடலை அமுக்கினேன்’ என தெரிவித்துள்ளார். தற்போது இதுதொடர்பாக பொலிசார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி