தேசிய மட்டத்தில் சாதனை படைத்த யாழ் மாணவன்!

தேசிய ரீதியாக சாதனை படைத்த யாழ் இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் திகழொளிபவன் தனது எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன.

பெறுபேறுகளுக்கு அமைய யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மகேந்திரன் திகழொளிபவன் தேசிய ரீதியாக தமிழ் மொழியில் முதலிடம் பிடித்துள்ளார்.

அவர் 198 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் மாணவன் மகேந்திரன் திகழொளிபவன் தனது வெற்றி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பதே தனது எதிர்கால இலட்சியம் என தெரிவித்துள்ளார்.

தனக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தனது நன்றியை தெரிவித்ததோடு, சக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி