தாய் இறந்த சோகத்தில் உயிரை விட்ட மொடல் அழகி!!

வட அயர்லாந்தை சேர்ந்த பிரபல மொடல் அழகி தாய் இறந்த சோகத்தில் தானும் இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட அயர்லாந்தை சேர்ந்த 20 வயதான இளம் மொடல் அழகியான Mairead O'Neill இரண்டு தனியார் இதழ்களின் முக்கிமான மொடலாக இருந்து வருகிறார்.

இவருடைய தாய் கடந்த 10 மாதங்களுக்கு முன்னதாக கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதிலிருந்து பல நாட்களாக அதிக மனசோர்வில் தனிமையிலேயே Mairead இருந்து வந்துள்ளார்.தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடும் கருத்துக்களும் சோகமானதாகவே இருந்து வந்துள்ளத்து. தாய் இறந்ததன் பின்னர் சகோரன் மற்றும் சகோதரியின் அரவணைப்பிலே Mairead நாட்களை கழித்து வந்துள்ளார். இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நண்பர்களுடன் வெளியில் சென்ற Mairead, அங்கு நடனமாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை விடிந்ததும் சுயநினைவிழந்து வீட்டில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவசரமாக மீட்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் Mairead இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.அவருடைய இறப்பிற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், தாய் இறந்த சோகத்தில் தான் அவர் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு சிறந்த நண்பனை எப்போதும் நம்பாதே" என பதிவிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி