தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ள தமிழ் மாணவன்!!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை 6ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் தேசியமட்ட ஆங்கிலத் தினப்போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

தேசிய ரீதியாக நடைபெற்ற நினைவுபடுத்தி ஒப்புவித்தல் போட்டியிலேயே ஜெ.துகிந்தரேஸ் என்ற மாணவன் சாதனையை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை பாடசாலை வறுமையான பாடசாலையாகவும், வளங்கள் குறைவான பாடசாலையாக காணப்படுகின்றது.மட்டக்களப்பு நகர் பகுதியில் வசிக்கும் ஜெ.துகிந்தரேஸ் தினமும் 15 கிலோ மீற்றருக்கும் தொலைவில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

இதேவேளை , முதன்முறையாக வலய வரலாற்றில் ஆங்கிலத் தினப்போட்டியில் தேசிய ரீதியில் சாதனைப்புரியப் பட்டுள்ளமையும் எடுத்துக் காட்டத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி