சிட்னியில் விமான விபத்தில் பலியான ஆறு பேர்!!

சிட்னியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து இறந்ததில் பிரித்தானிய கோடீஸ்வரர் உட்பட ஆறு பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்தது செல்பி எடுத்த ஒரு நபராக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

பிரித்தானிய கோடீஸ்வரரான Richard Cousins, அவரது காதலியான Emma Bowden, அவர்களது இரண்டு மகன்களான Edward மற்றும் William, மகள் Heather ஆகியோர் புத்தாண்டுக்கு முந்தையதினம் இந்த விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.

அத்துடன் அவுஸ்திரேலிய விமானியான Gareth Morganம் விபத்தில் உயிரிழந்தார்.

மிகவும் அனுபவசாலியான விமானி ஒருவர் ஓட்டிய விமானம் எப்படி விபத்திற்குளானது என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விமானியின் அறையில் செல்பி எடுக்க முயன்ற ஒரு நபர் தவறி விழும்போது முழங்கையால் விமானியின் தலையில் தவறுதலாக தாக்கியிருக்கலாம் என்றும் அதனால் அவர் தடுமாறி விழுந்ததால் விமானம் தண்ணீருக்குள் பாய்ந்திருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.விமான விபத்தைப் பார்த்தவர்களும் கூட விமானத்தில் எந்த அசாதாரண சத்தமும் இல்லை என்றும் திடீரென அது ஒரு பக்கமாக சரிந்து தண்ணீருக்குள் மூழ்கியதாகவும் தெரிவித்திருந்தது, விசாரணை அதிகாரிகளின் இந்த கருத்திற்கு ஆதரவாகவே உள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் விசாரணையின் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி