வீதியோர கடையில் இருந்த நபருக்கு வானத்திலிருந்து வந்த எமன்!

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கீழ் கடுகன்னாவை பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வீதியோரத்தில் இருந்த கடைத்தொகுதி மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் அங்கிருந்த நபரே உயிரிழந்துள்ளார்.

வீதியில் முறிந்துள்ள இந்த மரத்தால் கொழும்பு கண்டி பிரதான வீதியில் கண்டி நோக்கிய மருங்கில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி