இலங்கையில் தலைமுடியால் வெடித்த வன்முறை! மாணவ தலைவன் மீது கொடூர தாக்குதல்

தலை முடியை அலங்கரித்து கொண்டு பாடசாலைக்கு சென்ற மாணவனால் பாரிய மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

அரநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 17 வயதான மாணவன் தலை முடியை அலங்கரித்து கொண்டு பாடசாலைக்கு சென்றமையினால் மாணவ தலைவர் கத்தரிக்கோல் ஒன்றில் தலை முடியை வெட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவன் தனது சகோதரனுக்கு அறிவித்துள்ளார். சகோதரன் பாடசாலைக்கு முன்னால் மாணவ தலைவனை கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் மூவரின் உத்தரவினாலேயே மாணவ தலைவன் தலைமுடியை வெட்டியுள்ளார்.

எனினும் மாணவன், தனது சகோதரனுக்கு தகவல் அனுப்பி அவரை அன்றைய தினமே பாடசாலைக்கு வரவழைத்துள்ளார்.

பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் மாணவ தலைவன் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவ தலைவன் அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்ட மாணவனின் சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி