ஆசையாக வீட்டிற்கு வந்த ராணுவ வீரர்: காதலனுடன் இருந்த மனைவி! நடந்த அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில் மனைவியுடன் படுக்கையில் இருந்த பேஸ்புக் காதலனை விஷம் கொடுத்து ராணுவ வீரர் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் குமார் சி.ஆர்.பீ.பியின் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 29-ம் தேதியன்று மனைவி யமுனாவிற்கு போன் செய்த சுரேஷ், அக்டோபர் 2-ம் தேதி நான் வீட்டிற்கு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சுரேஷ், செப்டம்பர் 30ம் தேதியன்றே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அங்கு படுக்கையில் மனைவியுடன் அவருடைய பேஸ்புக் நண்பன் தீபக் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே யமுனா தான் செய்தது தவறு என சுரேஷிடம் மன்னிப்பு கோரினர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத சுரேஷ் யமுனாவின் சகோதரருக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.பின்னர் இருவரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக தீபக்கிற்கு விஷம் கொடுத்துள்ளார். இதில் தீபக் துடிதுடித்து இறந்துள்ளான். இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக இருசக்கர வாகனத்தில் அவனுடைய உடலை எடுத்துக்கொண்டு ஜின்ட் சாலை அருகே தூக்கி வீசி சென்றனர்.

அப்பகுதி வெளியாக சென்ற சில உள்ளூர்வாசிகள் சடலம் கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தீபக் அதிகமான முறை யமுனாவிடம் போனில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து யமுனாவிடம் விசாரணை நடத்திய பொலிஸார், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி