கணினி அறையில் வைத்து மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியர் !

மதவாச்சியிலுள்ள தேசிய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.

11 ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவி ஒருவரை இரு சந்தர்ப்பங்களில் கணினி அறையில் வைத்து வல்லுறவுக்குற்படுத்தியதாக மாணவியின் தாய் சிறுவர் பிரிவுக்கு வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவைச்சேர்ந்த பொலிஸ் சார்ஜன் 7959 அசோக தர்மரத்ன உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி