மழை காரணமாக மனித புதைகுழி வளாகத்தினை பாதுகாக்க நடவடிக்கை!

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இன்று 86ஆவது நாளாக இடம்பெற்றுள்ளது.

இன்று அகழ்வு பணிகள் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகள் இடம்பெறாத நிலையில் குறித்த வளாகத்தை முழுமையாக சுற்றி மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அதிகரித்த காற்றுடன் கூடிய காலநிலை மற்றும் அதிகரித்த மழை காரணமாக அகழ்வு பணிகள் நடைபெறும் வளாகமானது முழுவதும் நீரினால் சூழ்ந்து காணப்பட்டதை தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பெறும் சிரமம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் அகழ்வு பணியின் போது அப்புறப்படுத்தாமல் புதை குழியில் காணப்படுகின்ற மேலதிக மனித எலும்புக்கூடுகள் சிதைவடைவதற்கான வாய்ப்பும் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த வளாகத்தினை முழுவதுமாக மூடுவதற்கான நிதி பங்களிப்பு மற்றும் உதவியானது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக செயற்படும் அலுவலகத்தில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக மனித புதைகுழி வளாகத்தினை முழுவதுமாக சுற்றி மூடுவதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று குறித்த வளாகம் முழுவதையும் அதீத காற்று மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நீதவான் மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் மன்னார் மனித புதைகுழி தொடர்பான நிலையினை அறிவதற்கான அகழ்வு மற்றும் ஆய்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி