மைத்திரியை கொலை செய்ய திட்டமிட சீனாவின் உதவியை நாடிய இலங்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டியது யார்? என்பது தொடர்பான தகவல்களை திரட்ட சீனாவின் உதவியை இலங்கை நாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றின் அனுமதியை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் உளவு பிரிவான றோ இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்து தகவல்கள் வெளியாகின.

எனினும், இதற்கு இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடியிருந்தனர்.

ஜனாதிபதியை கொலை செய்வது குறித்த சதி திட்டம் தொடர்பான தகவல்களை ஊழல் மற்றும் மோசடி எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வழங்கியிருந்தார்.

அத்துடன், இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சதி தொடர்பான நாமல் குமாராவின் தொலைபேசி விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், தொழில்நுட்ப உதவியுடன் அவற்றை திரும்ப பெற சீனாவின் ஹுவேய் நிறுவனத்தின் உதவியை நாட பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

இதன்படி நீதிமன்றின் அனுமதியுடன், ஹுவேய் நிறுவனத்தின் உதவியுடன் நமல் குமாராவின் தொலைபேசி உரையாடல்களை பெற்று, விசாரணைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி