நட்சத்திர விடுதிக்கு எதிராக கையெழுத்து வேட்டை!

காரைநகரில் நட்சத்திர விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து வேட்டை நடாத்திய காரைநகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், எதிர்ப்பு கடிதம் மற்றும் கையெழுத்து படிவம் அடங்கலான மகஜரை பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளரிடம் கையளித்துள்ளனர்.

இன்று காலை சைவமகாசபை தலைவர் வைத்தியர் பரா நந்தகுமார் ஊர்காவற்துறை மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு விண்ணப்பம் நீதாவானால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைதியான முறையில் காரைநகர் இளைஞர்களால் கையெழுத்து வேட்டை நடாத்தி மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலாளர் தாம் இது தொடர்பாக அரசாங்க அதிபரிக்கு தெரியப்படுத்தி விரைவாக ஒரு காத்திரமான பதிலை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதேச சபை தவிசாளர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் தான் இது தொடர்பாக எந்த கருத்து தெரிவிக்க முடியாதெனவும், தொடங்கப்பட்ட வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி