பிரான்சில் இந்த மாதம் கொண்டுவரவுள்ள நடைமுறைகள்!!

பிரான்சில் இந்த மாதம் நிகழவிருக்கும் மாற்றங்களில் தந்தை அல்லது தாயுடன் மட்டும் வாழும் ஒரு பெற்றோரைக் கொண்ட குடும்பங்களுக்கு அதிக நிதியுதவி, மீண்டும் காஸ் விலை உயர்வு மற்றும் வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் காப்பீடுக்கான பணியாளரின் பங்கு ரத்து போன்றவை உள்ளடங்கும்.

ஒரு பெற்றோரைக் கொண்ட குடும்பங்களுக்கு அதிக நிதியுதவி அக்டோபர் 1, 2018 முதல் ஒரு பெற்றோரைக் கொண்ட குடும்பங்களில் உள்ள ஆறு வயதுக்கு குறைந்த குழந்தைக்கான உதவித்தொகை 30 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.

இந்த உதவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு நபரை பணிக்கு அமர்த்துபவர்கள் மற்றும் பகல் நேரத்தில் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மையங்களை பயன்படுத்துவோர் ஆகியோருக்கு பொருந்தும்.

குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் எத்தனை மணி நேரங்களுக்கு குழந்தைகளுக்கு தனி கவனிப்பு தேவைப்படுகிறது என்பதைப் பொருத்து மாதம் ஒன்றிற்கு 250 யூரோக்கள் வரை வழங்கப்படும்.Engie நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு காஸ் விலை சராசரியாக 3.25 சதவிகிதம் உயருகிறது.

சமையலுக்கு மட்டும் காஸ் பயன்படுத்துபவர்களுக்கு 1 சதவிகித உயர்வும், வீடுகளை வெப்பப்படுத்த காஸ் பயன்படுத்துபவர்களுக்கு 3.3 சதவிகிதமும், சமையல் மற்றும் வீட்டை வெப்பப்படுத்துதல் இரண்டிற்கும் காஸ் பயன்படுத்துபவர்களுக்கு 2 சதவிகிதமும் விலை உயர்வு இருக்கும்.

இந்த காஸ் விலை உயர்வால் 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

வேலையற்றோருக்கான காப்பீடு
வேலையற்றோருக்கான காப்பீட்டிற்கான பணியாளரின் பங்களிப்பு மொத்தமாக நீக்கப்படுகிறது, எனவே இனி பணியாளர்கள் அதிக ஊதியத்தை வீட்டுக்கு கொண்டு போகலாம்.

ஒப்பந்தங்கள் டிஜிட்டல் மயமாக்கம்
இனி 25,000 யூரோக்களுக்கு அதிகமான மதிப்புடைய பொது ஒப்பந்தங்கள் செய்வதற்கு மின்னணு முறையிலேயே ஏலம் விடப்படும்.

ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டனவா இல்லையா என்னும் முடிவுகள் கூட மின்னணு முறையிலேயே தெரிவிக்கப்படும்.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும், கையொப்பங்களும் மின்னணு முறையிலேயே இருக்கும்.

கையால் கையொப்பங்கள் இடும் முறை முற்றிலும் நீக்கப்படும்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி