தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீதி அமைச்சர் தலதா அதுகோரல இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 54 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு 45 பேர் தமிழர்களும், 6 பேர் சிங்களவர்களும், 3 பேர் முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெற்று தண்டனை அனுபவிக்க சிறைப்படுத்தப்பட்ட 43 கைதிகள் உள்ளனர்.

இந்த நிலையில், குறித்த தரப்பினரை விடுதலை செய்யும் அதிகாரம் நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் தமக்கு இல்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரல மேலும் தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி