நாடளாவிய ரீதியில் பலபாகங்களில் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினம்!!

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் பல பாகங்களில் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த வகையில், அக்கரப்பத்தனை சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அக்கரப்பத்தனை ஹோல்புறூக் ரீ பப்ளிக்கேன் சர்வதேச பாடசாலையில் இன்றைய தினம் சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ஸ்ரீ சத்தியவாணி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

“சிறுவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றுள்ளது. ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

ஊர்வலமானது அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு அக்கரப்பத்தனை மன்றாசி நகரம் வரை சென்றடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்துள்ளது.

இந்த நிகழ்வில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தஸ்ரீ, தனியார் நிறுவனம் ஒன்றின் இணைப்பாளர் கு.புஸ்பராஜ், பிரதேச செயலகத்தின் சிறுவர் அபிவிருத்தி பொறுப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி