அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்களுக்கு இழப்பீடு தேவையில்லை!-

இந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதம் ஏந்தி போரட்டம் செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை என வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐ.தே.க தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது நாட்டில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற மாயையை உருவாக்க ஒன்றிணைந்த எதிரணி முற்படுகிறது.

அவர்களுக்கு பதில் கூற வேண்டிய அரசாங்க தரப்புக்கள் மௌனம் சாதித்து வருவதால் அந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையென கருப்படுகின்றது என்றார்.

அப்போதைய அரசாங்கம்யுத்தம் செய்ய தேவையான ஆயுதங்களை சீனாவிடமிருந்து கடனுக்கே பெற்றுகொண்டது.

அந்த கடன்களின் பெரும் தொகையை 2020 ஆம் ஆண்டிலேயே மீளச் செலுத்த வேண்டும். அந்தச் சுமையும் நல்லாட்சி மீதே சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர்களுக்கு இழப்பீடு வழங்கும் அவசியமில்லை எனத் தெரிவித்த அவர், யுத்தத்தின் பாதிப்புகளுக்கு முகம்கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தவறில்லை.

அவர்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் உள்ளடங்குவர் என்றார்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி