மலேசிய விமானம் குறித்து மூடி மறைக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்!

மலேசிய விமானம் MH370 மாயமானது குறித்து வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக முக்கியமான விமானவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு பயணித்த மலேசிய விமானம் MH370 இந்தியப் பெருங்கடலுக்கு மேலாக பறந்தபோது மாயமானது.

227 பயணிகளையும் 12 விமான ஊழியர்களையும் சுமந்து சென்ற அந்த விமானம் திடீரென ராடாரிலிருந்து மறைந்தது.

இரண்டு பிரமாண்ட தேடல்களுக்குப் பிறகும் விமானத்தின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்த நிலையில் விமானம் மாயமான விடயம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

19 பேரைக் கொண்ட மலேசிய விசாரணைக் குழு, இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் விமானி மற்றும் துணை விமானியின் நடத்தையிலும் சந்தேகம் இல்லை என்றும் அறிக்கை அளித்திருந்தது.

மலேசிய விமானம் MH370 காணாமல் போனதற்கான உண்மையான காரணத்தை விசாரணைக் குழுவால் தீர்மானிக்க இயலவில்லை என்று கூறி அவர்கள் அறிக்கையை முடித்திருந்தார்கள்.

ஆனால் விமானம் காணாமல் போனது குறித்து தனிப்பட்ட விதத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள குழு ஒன்றின் உறுப்பினர்களான Mike Exner மற்றும் Don Thompson ஆகியோர், மலேசிய அரசு விசாரணையை உண்மையாக நிறைவேற்றத் தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ளதோடு விசாரணையில் என்னவெல்லாம் விடுபட்டுள்ளன என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்கள்.

மலேசிய விமானம் MH370 காணாமல் போனது குறித்த விசாரணையில் அரசியல் இடையூறு இருந்ததாகவும் அது தாமதப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன விமானம் குறித்து ஏழு விடயங்கள் குறித்த அதிக தகவல்களை அரசு வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

காணாமல் போன விமானம் குறித்த ராடார் தகவல்கள், எங்கு மற்றும் எப்போதெல்லாம் விமானம் கீழ் நோக்கி இறங்கியது மற்றும் மேல் நோக்கி எழும்பியது, அதனால் எரிபொருள் போன்றவை மீது என்ன தாக்கம் ஏற்பட்டது என்பது போன்ற தகவல்கள் வேண்டும் என்று கூறியுள்ள அவர்கள், கிடைத்த விமான பாகங்கள் அனைத்தும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவற்றின் கட்டமைப்பு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

பதிவு செய்யப்பட்டுள்ள உரையாடல்கள் குறித்த ஆய்வுடன், இறுதியாக 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி, விமானத்தின் விமானியான Zaharie Shahவுடன் நீண்ட நேரம் உரையாடிய விமான பொறியாளரான Zulhaimi bin Wahidinஇன் பங்கு என்ன என்பதை குழுவினர் உறுதி செய்ய விரும்புகிறார்கள்.

மூன்றாம் தரப்பினரின் சட்டவிரோத தலையீடு இருந்திருக்கலாம் என மலேசிய விசாரணைக் குழு கூறியிருக்கும் நிலையிலும் விமானியான Zaharie Shah குற்றமற்றவர் என்பதை தாங்கள் நம்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானம் காணாமல் போய் நான்கு நாட்கள் ஆன நிலையிலும் பயணிகளின் மொபைல் போன்கள் ஒலித்தன என்பதால் விமானம் கடலில் மூழ்கியிருக்க வாய்ப்பில்லை என ஒரு தகவலும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.




Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி