ரூபாயின் வீழ்ச்சியில் அரசியல் இலாபம் பெறும் கூட்டு எதிர்க்கட்சி!!

இலங்கை ரூபாயின் பொறுமதி வீழ்ச்சியடைந்துள்ள பிரச்சினை மூலம் அரசியல் இலாபம் பெற கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரூபாய் , டொலருடனான பெறுமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை அடிப்படையாக கொண்டு பொருளாதார தர்க்கம் ஒன்றை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது மற்றும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பது நாட்டின் பொருளாதாரத்துடன் இணைந்த நடவடிக்கை என இவர்கள் கூறுகின்றனர்.

டொலர் பெறுமதி ஏன் அதிகரித்துள்ளது என்ற காரணத்தை ஆராயாது, அதனை முழுமையாக அரசியல் மயப்படுத்தி வருகின்றனர். எனினும் 2012 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் டொலரின் பெறுமதி 15.4 வீதத்தினால் அதிகரித்தை இவர்கள் பேசுவதில்லை.

கூட்டு எதிர்கட்சியினர் பல்வேறு பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்தி அதன் ஊடாக இனவாதத்தை தூண்டி, பெரும்பான்மை பௌத்த மக்களை தூண்டி விட முயற்சித்து வருகின்றனர் எனவும் ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி