ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் சீக்கிய சிறுமி கற்பழிப்பு - பாகிஸ்தானில் கொடூரம்


பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள நன்கானா சாகிப் பகுதியில் உள்ள குருத்வாரா அருகே 15 வயதுடைய சீக்கிய சிறுமி கடந்த சனிக்கிழமை மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தார்.இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை தேடும் பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது நன்கானா பைபாஸ் சாலையில் நின்றிருந்த அரசு ஆம்புலன்சிலிருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டனர்.இதையடுத்து ஆம்புலன்ஸ் அருகே சென்றபோது, அதிலிருந்த 2 பேர் ஒரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
கீழே விழுந்த பெண் தனது மகள் என்பதை அறிந்து அவர்கள் கதறினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஹசன் அலி, சமீன் ஹைதர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி