நாளாந்தம் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து செல்லும் ரூபாவின் பெறுமதி!

சமகாலத்தில் இலங்கையின் ரூபாவின் பெறுமதி நாளாந்தம் பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் மிக மோசமான பெறுமதியை ரூபாய் இன்று பதிவு செய்துள்ளது.

டொலர் ஒன்றுக்கான அதிக கூடிய வீழ்ச்சியை ரூபாய் இன்று பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இலங்கை ரூபாயின் பெறுமதி 174.12 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 170.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி 170.23 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அடுத்து வரும் சில மாதங்களில் 200 ரூபாவை எட்டும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி