மலேசிய விமானம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

உலக அளவில் தலைப்பு செய்தியான மலேசிய விமானம் தொடர்பில் புதிய தகவலுடன் இளைஞர் ஒருவர் பத்திரிகைகளில் மீண்டும் செய்தியாகியுள்ளார்.

மாயமான மலேசிய விமானம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாக நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் அதற்கான விடையாகுமா என அனைவரின் கேள்வியாக உள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்னர் பயணத்தினிடையே மாயமான அந்த விமானம் அடர்ந்த வனப்பகுதியில் சிதைந்த நிலையில் கண்டதாக இளைஞர் ஒருவர் புகைப்படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார்.

கூகிள் செயற்கைக்கோள் வரைபடத்தை துல்லியமாக ஆராய்ந்த அந்த இளைஞர் குறித்த விமானத்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஆனால் இது மாயமான மலேசிய விமானம் தானா என அறுதியிட்டு கூற முடியாது எனவும், கடந்த ஒரு வாரத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் 2 விமானம் சிதைந்த நிலையில் கிடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் விவர்பூல் பகுதியை சேர்ந்த ஜான் பென்ஸ்லி என்ற இளைஞர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மலேசியாவின் வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இந்த விமானம் சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அடர்ந்த வனப்பகுதியில் விமானம் போன்ற ஒரு பொருள் கிடப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் அது மலேசிய விமானமா என்பது சந்தேகமே என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசிய தலைநகரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றது எம்.எச்.370 என்ற விமானம்.

விமான ஊழியர் உள்ளிட்ட 239 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் பாதி வழியில் மாயமானது. மாயமான விமானம் தொடர்பில் 26 நாடுகள் தேடுதல் பணியில் களமிறங்கின.

ஆனால் இதுவரை மாயமான எம்.எச்.370 என்ற விமானம் தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி