ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை - மாவை சேனாதிராஜா

ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக ஜனாதிபதி உள்நாட்டிலயே தீர்வு காணுவதாக குறிப்பிட்டுள்ளமை இந்த உலகத்தை ஏமற்றுவதற்காகவே என தமிழ்தேசிய கூட்டமைப்பு கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டி இன்று மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த நாட்டிலே ஜே.வி.பியினர் ஆயுதம் ஏந்தி அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுவதற்க்காக போராடிய காலத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் என்ற காரணத்தினால் அரசாங்கம் அவர்களை புறக்கணித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விசாரணை நடத்த ஒரு விசேட விசாரணைக்குழுவை அரசு இதுவரை நியமிக்கவில்லை.

அவர்கள் எதற்காக போராடினார்கள் என்பதன் உண்மைகளை கண்டறிந்து அதற்கு தீர்வைக்காண முன்வரவில்லை.

10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் கைதிகளை வாட்டி வதைத்து, அந்த இளைஞர்கள் தமது உயிரை பணயம் வைத்து சிறைக்குள்ளயே உண்ணாவிரதப்போராட்டம் நடத்த இந்த அரசு வைத்துள்ளது.

இவற்றை நாங்கள் தீவிரமாக கண்டிக்கின்றோம். அதே நேரத்தில் இந்த சிறைக்கைதிகள் நிச்சயமாக மிகவிரைவில் விடுவிக்கப்பட வேண்டும்.

அப்படி அவர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் நாங்கள் இவ்வாறாக கண்டண போராட்டங்களை கொழுப்பிலும் தொடர வேண்டியிருக்கும்.

அவ்வாறு போராடுவது மட்டுமல்ல சர்வதேச ராஜதந்திரிகளிடத்தில், ஐ.நா மனிதஉரிமை பேரவை ஆணையாளர்களிடத்தில் முறையிடவேண்டியிருக்கும்.

ஏற்கனவே பல நாட்டு தூதரகங்களில் இந்த விடயம் குறித்து நாங்கள் பேசியிருக்கின்றோம். 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம்.

கைதிகளின் விடுதலை தொடர்பில் பொறுத்தமான முடிவுகள் எடுப்போம் என்று வாக்குறுதி அளித்து ஐ.நாவில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது.

ஆனால் கடந்த 25 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா பொது கூட்டத்திலே ஜனாதிபதி உள்நாட்டிலயே இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வைகாண வேண்டும் என்று கூறியிருப்பது இந்த பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்க்கப்படவில்லை என்பது நிரூபிக்கின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் ஒரு போரை ஏற்படுத்திய காரணத்தினால் அதன் விளைவுகளால் இன்று சர்வதேசம் தலையிட்டிருக்கின்றது. 2015ம் ஆண்டு ஐ.நாவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நாவில் ஒப்புக்கொண்ட அந்த தீர்மானத்திற்கு எதிராக இன்று ஜனாதிபதி உள்நாட்டிலயே தீர்வு காணுவது என்று கூறுவது எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

எங்களை மட்டுமல்ல இந்த உலகத்தை ஏமற்றுவதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருந்தால், இந்த ஆட்சிக்கு எதிராக, ஜனாதிபதிக்கு எதிராக நாங்கள் ஆராய்ந்த நடவடிக்கையை சர்வதேச மட்டத்தில் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் ஜனாதிபதி தமிழ் மக்களுடைய போராட்டங்களுக்கும் கைதிகளுடைய போராட்டங்களுக்கு எங்களுடைய கட்சிகளுடைய வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்காமல் இருக்கின்றது.

உடனடியாக விரைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்.

புனர்வாழ்வு அளித்து பொதுமன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

இன்று முல்லைத்தீவில் மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பல மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் தொடர்கின்றன.

இதற்கு ஜனாதிபதி செவிசாய்த்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் இங்கு கூடியிக்கின்ற தமிழ் மக்கள் சார்பிலும் நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்று தெரிவித்தார்.


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி