இலங்கை மாணவனால் உருவான ரொக்கட்!! பார்வையிட்ட ஜனாதிபதி!!

இலங்கையில் மாணவன் ஒருவரினால் தயாரிக்கப்பட்டு வரும் ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

குறித்த மாணவின் அபார திறமைக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மாணவனின் திறமையை நேரில் பார்வையிட்டார்.

குறித்த பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு இடம்பெற்ற X-Ban கண்காட்சியை திறந்து வைத்தார்.

மாணவர்களின் திறமைகளை உலகிற்கு கொண்டு செல்லும் இந்த கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி மாணவர்களின் திறமையை பாராட்டியிருந்தார்.

அங்கு கிஹான் ஹெட்டிஆராச்சி என்ற மாணவனினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட்டிற்கு ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியிருந்தார்.

மாணவன் தயாரித்த ரொக்கட்டை விண்ணுக்கு செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

இதனையடுத்து மாணவனின் தயாரிப்பில் உருவான ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்தி பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மாணவின் தயாரிப்பானது இந்தியா உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி