தாயின் சேலை 11 வயது மகளுக்கு எமனாக மாறிய சோகம்


தாயின் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் கழுத்து சிக்கி பதினொரு வயதான சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் கண்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி - பாததும்பர, உடுகம்பஹா பிரதேசத்தில் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்தில் பாட்டியுடன் இருந்த சிறுமி ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது சேலை கழுத்தில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

பிரேத பரிசோதகர் நோமன் கொஸ்தாவினால் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது.

வத்தேகம மகளிர் கல்லூரியில் ஏழாம் தரத்தில் கல்வி கற்று வந்த மதுவந்தி குமாரி ஏக்கநாயக்க என்னும் 11 வயதான சிறுமியே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பன்வில பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி