189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள்!!

இந்தோனேஷியாவில் 189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவுக்கு கடந்த 29-ஆம் திகதி விமான ஊழியர்கள் உட்பட 189 பேருடன் பயணித்த லயன் ஏர் மேக்ஸ் பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலே விமான அறையின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடலில் விழந்து நொறுங்கியது.


இதில் 189 பேரும் உயிரிழந்திருக்க கூடும் என்று உறுதியாக கூறப்படுகிறது. தற்போது வரை 67 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய உதவும் விமானத்தின் கருப்பு பெட்டி தேடும் பணி மும்மரமாக நடைபெற்றது.

கடந்த ஒன்றாம் திகதி விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு கருப்பு பெட்டியினை நீச்சல் வீரர்கள் தேடி வருகின்றனர்.


இதில் கிடைத்த கருப்பு பெட்டியை வைத்து அதில் இருக்கும் தகவல்களை கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திபோதும், அதில் சில தகவல்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.

அதாவது அந்த கருப்பு பெட்டியில் பிங்க் நிற இயந்திரம் ஒன்று இருக்குமாம், அது காணமல் போயுள்ளது, அது கிடைத்தால் விபத்திற்கான காரணத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதனால் அந்த கருப்பு பெட்டியின் பிங்க் நிற இயந்திரத்தை தேடுவதற்காக நீச்சல் வீரர்கள் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளனர். அப்படி நீச்சல் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது தான், அந்த குழுவில் இருந்த சைஹருல் அண்டோ என்ற 48 வயது நீச்சல் வீரர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதுமட்டுமின்றி கடலுக்கு அடியில் ஆக்சிஜன் அளவு மிக மிகக் குறைவாக இருந்ததுதான் அவரின் இறப்புக்குக் காரணம் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முந்தையநாள் அதில் தொழில்நுட்ப பிரச்சனை இருந்தது. அது சரிசெய்யப்பட்ட பின்புதான் 29-ஆம் திகதி காலை விமானம் இயக்கப்பட்டதாக முதலில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கருப்பு பெட்டியில் கிடைத்த தகவலின் படி விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மிகவும் வேகமாகச் சென்றுள்ளது. தொடர்ந்து அடுத்த 10 நிமிடங்களில் விமானம் செயலிக்கவே பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இறுதியாக 400 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விமானம் கடலில் விழுந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும் விமானம் செங்குத்தாக விழுந்ததற்காகக் காரணம், விபத்துக்கான முக்கிய காரணம் போன்றவை கருப்புப் பெட்டியில் தொலைந்த பாகங்கள் கிடைத்தவுடன் தெளிவாக தெரியவரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.News: https://news.lankasri.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி