மூன்று பெண்களிடம் தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளை!

யாழ். கல்வியங்காடு பகுதியில் தீபாவளி தினத்தன்று வழிபாட்டுக்காக ஆலயங்களுக்கு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் இருந்து மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 பவுண் தாலிக் கொடியினை அறுத்து கொண்டு தப்பியோடியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தாலிக் கொடியை பறிகொடுத்த பெண் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை திருநெல்வேலி சிவன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இளைஞர் ஒருவர் 3 பவுண் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பி ஓடியுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிப்பாட்டுக்கு சென்ற மூதாட்டி ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 2 பவுன் சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் மூதாட்டியை தள்ளி வீழ்த்தி விட்டு சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடியுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி