நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 204 பேர் வரை பாதிப்பு! 44 வீடுகள் சேதம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 44 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,கண்டி மாவட்டத்தில் 11 பிரதேச செயலகங்களில் இவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அக்குறணை நகரிலும் மினிப்பேயிலும் வெள்ளம் காரணமாக 25 வர்த்தக நிலையங்களும் ஏழு வீடுகளும் பாதிக்கப்ட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


News:https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி