2050ல் உலகில் பல மில்லியன் மக்களின் உயிரை பறிக்கும் வைரஸ்!

சில வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் 2050ல் உலகில் பல மில்லியன் மக்கள் பலியாக நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

பிரான்ஸை சேர்ந்த The Organisation for Economic Co-operation and Development -OECD அமைப்பு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதன்படி 2050ல் உலகம் மிகப்பெரிய நோய் தாக்குதலை சந்திக்கும், அப்போது பல மில்லியன் மக்கள் பலியாக வாய்ப்புள்ளது என்று கூறியது.

முக்கியமாக அவுஸ்திரேலியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள மக்கள் அதிக அளவில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என கூறப்பட்டுள்ளது.

சூப்பர்பக் என்று இந்த வைரஸை அழைக்கிறார்கள். இதன் உண்மையான பெயர் விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல் இது ஒரு தனித்த வைரஸ் கிடையாது , பல வைரஸ்களின் தொகுப்பு என்றும் கூறுகிறார்கள்.

இந்த வைரஸ்கள் தான் 2050ல் மக்களை கொத்து கொத்தாக கொல்ல போகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் கிருமிகள் தற்போது உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளுக்கு அழியும் நிலையில்தான் உள்ளது. ஆனால் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மருந்துகளை எதிர்க்கும் திறனை பெற்று வருகிறது.

விரைவில் இந்த நோய் கிருமிகள் முழுக்க முழுக்க மருந்துகளை எதிர்க்கும் சக்தியை பெறும். 2050ல் இந்த சூப்பர்பக்ஸ் முழு மருந்து எதிர்ப்பு திறனை அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அப்படி நடக்கும்பட்சத்தில், எந்த விதமான மருந்துகள் கொடுத்தும் நோய்களை தீர்க்க முடியாது. அதன்பின் இப்போது இருக்கும் நோய்களை குணப்படுத்தவே புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படும்

இப்போதில் இருந்தே இதற்கான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


News: http://world.lankasri.com/
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி