நீதிமன்ற உத்தரவை மீறி இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியான 2.0! ரசிகர்கள் அதிர்ச்சி

உலகம் முழுக்க 10 ஆயிரம் தியேட்டர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படம் இன்று வெளியாகிவிட்டது. ஒரு இந்திய படம் அதிக தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறை.

நீண்ட நாளாக தாமதமாகி வந்த இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் படம் வெளியாகியுள்ளது. ரூ 400 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் இணையதளத்தில் வெளியாகிவிடக்கூடாது என நீதிமன்ற உத்தரவுடன் படக்குழு பல ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்நிலையில் இந்த தடையையும் மீறி படம் வெளியான இன்றே இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் இது ரசிகர்களுக்கும், படக்குழுவுக்கும் அதிர்ச்சியே.

சர்கார் படம் வந்த சில மணிநேரங்களில் படத்தை வெளியிட்டது போல இப்போதும் செய்துள்ளார்கள். ஏற்கனவே 2.0 படத்தையும் வெளியிடுவோம் என கூறியிருந்தது போலவே இப்போது நடந்துவிட்டது.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி