23ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூடவுள்ள நாடாளுமன்றம்!! திடீர் அறிவிப்பு!!

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபா நாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் சபாநாயகர் இந்த விசேட அழைப்பினை விடுத்தார்.

கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடியபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடகவில்லை என்பதுடன், சில நிமிடங்கள் வரையே நடந்த நாடாளுமன்ற அமர்வுகளை பிரதி சபா நாயகர் 23ஆம் நாளுக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையிலேயே சபா நாயகர் கரு ஜெயசூரிய வெள்ளிக்கிழமை காலை சகல கட்சித் தலைவர்களுக்குமான விசேட கூட்டத்திகு அழைப்பு விடுத்தார்.

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளமையானது, மஹிந்த தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமர்வின் போது மஹிந்தவின் பிரதமர் பதவி பறி போகும் வாய்ப்புகள் உள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி