துப்பாக்கிச்சூட்டில் 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவில் சமீபகாலமாக மக்கள் கூடும் பகுதியில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கலிபோர்னியாவில் தெற்கு பகுதியில் இருக்கும் தவுசண்ட் ஓக்ஸ் நகரில் பார்டர்லைன் பாரில் நேற்றிரவு மர்மநபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி திடீரென சரமாரியாக சுட்டார்.

இதனால் அங்கிருந்த மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள அலறி அடித்து ஓடினர். சிலர் கதறியபடி தரையில் படுத்து தப்பித்தனர். சிலர் டேபிளுக்கு அடியில் தஞ்சமடைந்தனர்.

இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக 12 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாயினர். பலர் காயமடைந்தனர். அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடற்படை முன்னாள் வீரர் இயான் டேவிட் லாங் (28) என்பது தெரியவந்தது.

இவரை பொலிசார் அந்த இடத்திலே சுட்டுக் கொன்றுவிட்டனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இந்த பாருக்கு அடிக்கடி வரும் மாட் வென்னர்ஸ்ட்ரோம் என்ற இளைஞர் 35 பேரின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த பாருக்கு வரும் அவர், துப்பாக்கியால் ஒருவர் சுடுவதைக் கண்டதும் உடனடியாக அனைவரையும் காப்பாற்றுவதில் இறங்கினார்.

தனது அருகில் இருந்தவர்களை டேபிளுக்கு பின்பக்கம் ஒளிய வைத்தார். சிறிது நேரத்தில், துப்பாக்கியால் சுட்ட நபர், அடுத்த ரவுண்ட்டுக்கு தோட்டாக்களை நிரப்புவதைக் கண்டார் வென்னர்ஸ்ட்ரோம்.

உடனே அங்கிருந்த டேபிள் ஒன்றை எடுத்து கண்ணாடி ஜன்னலை உடைத்தார். அது உடைந்ததும் அங்கிருந்த இளம் பெண்களையும் இளைஞர் களையும் அதன் வழியாக வெளியே குதிக்க வைத்தார். இப்படி 35 பேரை காப்பாற்றியுள்ளார். இதே போல மேலும் சிலர் மற்றொரு பக்கம் ஜன்ன லை உடைத்து வெளியேறியுள்ளனர்.


News: https://news.lankasri.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி