3.5 கோடி காரில் செல்பவர்.. - விஜய்யை நேரடியாக தாக்கி பேசிய முதலமைச்சர்


சர்கார் படத்திற்கு எதிராக தொடர்ந்து அரசியல் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்போது அவர் சர்கார் படத்தை மோசமாக விமர்சித்துள்ளார்.

"இலவசம் வேண்டாம் என கூறும் முருகதாஸின் உறவினர்களே பலரும் இலவச பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான ஆதாரம் உள்ளது" என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரு படத்திற்கு 50 கோடி சம்பாதிப்பவர்கள் மக்களுக்கு சேவை செய்ய எத்தனை கோடி கொடுத்தார்கள் என நடிகர் விஜய் பற்றி அவர் விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசு கல்வி உட்பட பலவற்றை இலவசமாக கொடுக்கிறது, அது ஏழை மக்களுக்கு பயன்படுகிறது. அவர்கள் 3.5 கோடி காரில் செல்வதில்லை, ஏசி ரூமில் இருப்பதில்லை என கூறியுள்ளார்.

"சர்கார் பேனர் கிழித்தது அதிமுகவினர் என தவறாக பேசப்படுகிறது, அதிமுகவினரோடு பொதுமக்களும் தான் போராட்டம் நடத்தினார்கள்" என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் பற்றி பேசிய இபிஎஸ், "அவர் படத்திற்கு பிரச்சனை வந்ததும் நாட்டை விட்டு போகிறேன் என சொன்னவர். அவர் எப்படி மக்கள் பிரச்னையை தீர்ப்பார். அவர் அரசியல் நடிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என விமர்சித்துள்ளார்.
Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி