கடந்த வருடம் 44 வீரர்களுடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு!!

கடந்த ஆண்டு 44 வீரர்களுடன் மாயமான அர்ஜென்டினா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் பலவும் கண்ணீருடன் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட தேடுதல் பணிக்கு இறுதியில் வெற்றி கிடைத்துள்ளது.

மாயமான மலேசிய விமானம் போன்று அர்ஜென்டினா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலுக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் நிபுணர்கள் மத்தியில் இருந்து வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி அர்ஜென்டினா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் சான் ஜுவான் கடற்பகுதியில் இருந்து மாயமானது.


குறித்த கப்பலில் அதிகாரிகள் உள்ளிட்ட 44 கடற்படை வீரர்கள் சென்றுள்ளனர். சுபு மாகாணத்தின் சான் ஜார்ஜ் வளைகுடா பகுதியில் வைத்து கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் நடந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பலனாக ஓராண்டுக்கு பின்னர் மாயமான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகோனியாவில் உள்ள வால்ட்ஸ் தீபகற்பம் பகுதியின் 2,625 அடி ஆழத்தில் மாயமானநீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

34 ஆண்டு காலப்பழக்கம் கொண்ட கப்பல் என்பதால் முறையான பராமரிப்பு இல்லாமல் மாயமாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

ஆனால் குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் கோளாறுகள் ஏதும் இல்லை என்றும் முறையான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட 10-கும் மேற்பட்ட நாடுகளின் சிறப்பு நிபுணர்கள் குறித்த தேடுதலில் கடந்த ஓராண்டாக ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


News: https://www.tamilwin.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி