இராணுவ வீரருக்கு 5,160 ஆண்டுகள் விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை!!

கவுதமேலா நாட்டில் 1982 ஆம் ஆண்டு ஒரு கிராமத்தை சேர்ந்த 171 பேரை கொலை செய்த இராணுவ வீரருக்கு 5,160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1982-ம் ஆண்டில் அந்நாட்டின் சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் ஆட்சியில் இருந்தபோது உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. எக்ஸில் மாயா இனத்தவர்களை கொன்று குவிக்க சர்வாதிகாரி எப்ரெயின் ரியாஸ் மான்ட் உத்தரவிட்டார்.

ராணுவத்தினர் 19 பேரைக் கொன்று அவர்களின் ஆயுதங்களைக் கொரில்லா படையினர் எடுத்துச் சென்றிருந்தனர். இதனால், ராணுவத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

கொரில்லாக்கள் விவரத்தை டாஸ் எரிஸ் நகர மக்கள் வெளியிடாத காரணத்தால் வீடுகளில் இருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரையும் வெளியே இழுத்து வந்து ராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்தனர். மேலும் கொலை செய்வதற்கு முன் பெண்களையும், சிறுமிகளையும் பலாத்காரம் செய்து சிதைத்தனர்.

இந்தப் படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரில் முக்கியமானவர் முன்னாள் ராணுவ வீரர் சான்டோ லோபஸ். இவர் மீது 171 பேரைக் கொலை செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

171 பேரைக் கொலை செய்த சான்டோ லோபஸுக்கு ஒவ்வொருவரையும் கொலை செய்தமைக்காக தலா 30 ஆண்டுகள் வீதம் 5 ஆயிரத்து 130 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தைகளை இரக்கமின்றிக் கொன்றதற்காக கூடுதலாக 30 ஆண்டுகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 160 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முதல் முறையாக மிகப்பெரிய அளவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


News: https://news.lankasri.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி