8 மாதங்களாக வீட்டில் கிடந்த இறந்த நபரின் உடல்!

ஜேர்மனில் 8 மாதங்களாக தனது வீட்டில் இறந்து கிடந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்ட Ruhr area வில் Gelsenkirchen குடியிருப்பில் வசித்து வந்த 46 வயதான நபர் இறந்துகிடந்துள்ளார்.

இவர் இறந்துகிடந்தது 8 மாதங்களுக்கு பின்னரே தெரியவந்துள்ளது. இவரது உடலை கைப்பற்றிய அதிகாரிகள், இந்த நபர் இறந்து கிடந்தது மற்றும் இவரது விவரங்கள் எதுவும் இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த நபர்களுக்கு தெரியாமல் இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.

இவருக்கு என்று உறவினர்கள் யாரும் இல்லை, மேலும், அருகில் வசித்தவர்களக்கு இவரது பெயர் மற்றும் முகவரியை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

ஜேர்மனில் தனிமையில் வசிப்பவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


News: https://www.tamilwin.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி