ரணிலிடம் நாட்டை ஒப்படைத்தால் இலங்கைக்கு பேராபத்து!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டை ஒப்படைத்தால் சில காலத்தில் இலங்கை என்றவொரு நாடே இல்லாமல் போய்விடுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். இதற்கு ரணிலிடம் நாட்டை ஆட்சி செய்வதற்கு ஒருபோதும் பொறுப்புக்களை மக்கள் வழங்க கூடாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ரணில் பதவியை இழந்தால் தங்களது பதவி பறிபோகும் என்ற எண்ணத்தில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை வழங்குகின்றனர் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.



News: https://www.jvpnews.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி