சபாநாயகரின் அறிவிப்பால் கடும் ஆத்திரமடைந்த ஜனாதிபதி!!

சபாநாயகரின் அறிவிப்பால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் ஆத்திரமுற்றுள்ளதாக மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபிக்கும் வரை முன்னைய அரசு மற்றும் பிரதமரே அங்கீகாரமானவர்கள் என்ற சபா நாயகரின் அறிவிப்பினாலேயே அவர் இவ்வாறு ஆத்திரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அவசர கந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதில் சபாநாயகர் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் போல் செயற்படுவதாக சாடியதுடன் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவது குறித்து ஆராயுமாறு கட்சியின் சட்ட நிபுணர்களை பணித்துள்ளார்.

இதேவேளை இன்று புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூடினாலும் சிறிதளவு நேரமே இடம்பெற்றுள்ளன.நாடாளுமன்றத்திற்கு அருகில் அரச ஆதரவு பேரணி இருப்பதாலும் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் பொறுப்பேற்கவிருப்பதாலும் அமைச்சரவை கூட்டம் சில மணி நேரமே நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி