இந்ததியரின் பிரம்மாண்ட சிலையை விமர்சித்த பிரித்தானிய அமைச்சர்!!

இந்திய அரசு சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது முட்டாள்தனமானது என பிரித்தானிய அமைச்சர் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக சர்தார் வல்லபாய் படேலின் சிலையை இந்தியா எழுப்பியது. 182 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த சிலைதான் உலகிலேயே உயரமான சிலை ஆகும்.

ஆனால், அதிக பொருட்செலவில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் இந்த சிலையை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில், பிரித்தானியாவிடம் இருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது.

அதே சமயத்தில் இந்தியா மிகப் பெரிய சிலை செய்வதற்கு, 3000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது முட்டாள்தனமானது. இந்த அளவுக்கு செலவு செய்து பிரம்மாண்ட சிலையை அவர்களால் செய்ய முடியும் என்றால், அந்த நாட்டிற்கு நாம் உதவி வழங்க தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மேலும் சில பிரித்தானிய அமைச்சர்களும் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கக்கூடாது என தங்களது கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


News: https://news.lankasri.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி