ஆட்சி மாற்றத்திற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு !!

சிறிசேன மற்றும் மஹிந்தவிற்கு எதிராக ஆட்சி மாற்றம் வேண்டி ஐக்கிய தேசிய கட்சியினர் தேங்காய் உடைத்து வழிபாடு செய்துள்ளனர்.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியிறக்கம் செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி, மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து, இலங்கை நாட்டில் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்தது.

இதையடுத்து, இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரகடனத்தில் அதிபர் சிறிசேனா நேற்று இரவு கையெழுத்திட்டார். ஜனவரி 5 ஆம் தேதி நாடு தழுவிய பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், புதிய அரசு ஜனவரி 17 ஆம் தேதி பொறுப்பு ஏற்கும் என்றும் அரசாணையில் அவர் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் தங்களது கருத்துக்ளை வெளிபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சி தொண்டர்களும் இணைந்து முன்னேஸ்வரம் சிவன் கோவில், பிள்ளையார் கோவில் மற்றும் காளி கோவில்களில் ஆட்சி மாற்றத்தை வேண்டி தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்


News: https://www.jvpnews.com


Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி