ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை!

மறு அறிவித்தல் வரும்வரை அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு புதிய நியமனங்களை வழங்க வேண்டாமென ஜனாதிபதியின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்..

அப்படி அவசர தேவை இருக்குமாயின் மேலதிக செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வு பெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் , பிரதமர் - அமைச்சரவை - பொதுநிர்வாக அமைச்சு- நிதி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது...


News: https://www.jvpnews.com/srilanka
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி