நாடாளுமன்றில் யாருக்கு பெரும்பான்மை உண்டு என்பது இன்றைய தினம் அம்பலமாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இன்று நாட்டில் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்கவில்லை, இதனால் நான் நாடாளுமன்ற அமர்வுகளை எனது செல்லிடப்பேசியில் நேரலையாக, முகநூல் வழியாக ஒளிபரப்பு செய்தேன்.
இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு சொல்ல வேண்டும். நாடாளுமன்றில் யாருக்கு பெரும்பான்மை பலம் உண்டு என்பது தற்பொழுது புலனாகியுள்ளது.
ஜனாதிபதி யாரை வேண்டுமானாலும் பிரதமராக நியமிக்க முடியும். எனினும் அவர் நாடாளுமன்றில் பெரும்பான்மையுடையவராக இருக்க வேண்டும்.
நாடு தற்பொழுது எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகள் அனைத்திற்கும் ஜனாதிபதி பொறுப்பு சொல்ல வேண்டுமென ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
News: https://www.jvpnews.com