அமெரிக்கா மீது குற்றம் சுமத்தும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தலையீடு செய்கின்றன என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தின் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபாநாயகர் கருஜெயசூரிய பாராளுமன்றத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தமைக்கு வாசுதேவ நாணயக்கார கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க பிரிட்டன் தூதுவர்கள் உட்பட வெளிநாட்டு தூதுவர்களை சபாநாயகர் பாராளுமன்றத்தில் சந்தித்தமை குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது தேர்தல் மற்றும் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்து குற்றம்சாட்டிவந்துள்ளன என தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார அவ்வாறன சூழ்நிலையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்க பிரிட்டிஸ் தூதுவர்கள் தலையிடுவதை நீங்கள் எப்படி சகித்துக்கொள்கின்றீர்கள் என்பது புரியவில்லை என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2015 இல் அப்போதைய அரசாங்கத்தினை வீழ்த்துவதில் மேற்குலகம் பங்களிப்பு வழங்கியது வெளிப்படையான விடயம் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


News: https://www.jvpnews.comShare on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி