தற்போதைய அரசாங்கத்தால் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாது!!

“தற்போதைய அரசியல் நிலமையில் நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான நிதியை செலவிடுவதில் சர்ச்சை நிலவுகின்றது” என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால கணக்கறிக்கையையோ அல்லது வரவு செலவு திட்டத்தையோ சமர்ப்பிக்கா விட்டால் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து அரசு செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்படும்.

வரிக்கணக்கிலிருந்து நிதியை பெறுவதாயின் சட்டபூர்வமான நிதியமைச்சர் ஒப்பமிட வேண்டும். பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் அரசாங்கம் ஒன்று இல்லாவிட்டால் அரச சேவையாளர்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சமூர்த்திக் கொடுப்பனவு பெறுபவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்திடமிருந்து நிதியை பெறும் அனைவருக்கும் நிதியை செலுத்த முடியாமற் போகும்

இடைக்கால கணக்கறிக்கையையல்ல 2019ஆம் ஆண்டுக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கவிருந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க நாம் தயார்.

பலவந்தமாக ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் சமர்ப்பித்தால் அது தோல்வியடையும் ஏனென்றால் அவர்களுக்கு பெரும்பான்மையில்லை.

கதிரையில் அமர்ந்துவிட்டால் மட்டும் பெரும்பான்மை கிடைத்து விடாது எதிர் தரப்பில் அமர்ந்திருந்தாலும் எமக்கே பெரும்பான்மை உள்ளது.

ஆகவே இவர்களால் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பது தெளிவான விடயமாகும்.” என தெரிவித்தார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி