அமெரிக்காவின் சிறிய ரக விமானத்தை திருடிச் சென்ற சிறுவர்கள்!!

அமெரிக்காவின் சிறிய ரக விமானத்தை சிறுவர்கள் திருடிச் சென்ற நிலையில் பொலிசாரின் அறிவுறுத்தலின்படி விமானம் பத்திரமாக தரையிறங்கிய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது நன்றி செலுத்தும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கொண்டாட்டங்களில் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தா நகரில் உள்ள சிறிய உள்நாட்டு விமான நிலையத்தில் விமானம் நேற்றுமுன்தினம் நிறுத்தப்பட்டு இருந்தது.

அப்போது, 14 மற்றும் 15 வயதுசைய இரு சிறுவர்கள், டிராக்டர் ஓட்டிக்கொண்டு விமான நிலையப் பகுதிக்குள் வந்தனர். விமானத்தில் விமானி இல்லாமல் விமானம் நிற்பதை அறிந்த இரு சிறுவர்கள் விமானத்தை எடுத்து ஓடுபாதையில் செலுத்தி பறந்தனர்.

இதைப் பார்த்த விமான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் விமான நிலைய பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பின் பொலிசார் அந்த இரு சிறுவர்களிடம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசி தரையிறங்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தரையிறங்கும் முறை குறித்தும், எப்படித் தரையிறங்க வேண்டும் என்பது குறித்தும் கூறி பத்திரமாகத் தரையிறங்கினார்கள். இந்த இரு சிறுவர்களும் ஏறக்குறைய 24 மைல் அளவுக்குப் பறந்தபின் தரையிறங்கியுள்ளனர்.

இது குறித்து பொலிசார் தங்களின் பேஸ்புக் பக்கத்தில், இரு சிறுவர்கள் ஜென்சன் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடிச் சென்றனர்.

பின் எங்கள் அறிவுறுத்தலின்படி அவர்கள் இருவரும் விமானத்தை தரையிறக்கினார்கள்.

தரையிறங்கியபின் இரு சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பெயரில் வெர்னல் நகரில் உள்ள சிறுவர்கள் கண்காணிப்பு மையத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.


News:https://news.lankasri.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி