அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!!

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என சிரேஸ்ட அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் மீண்டும் ஒரு புதிய வர்த்தமானி மூலம் வாபஸ் பெறும் அறிவிப்பு வரலாம் எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்தான அடுத்தக்கட்ட விசாரணைகள் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் சார்பில் வாபஸ்பெறும் முடிவை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கக்கூடும் என தெரியவருகின்றது.

அதனால் மீண்டும் ஒரு புதிய களம் அமையும். அந்த புதிய களம் அமைந்தால் நாடாளுமன்றம் மீண்டும் கலையாது 2020ஆம் ஆண்டில் தான் பொது தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தெரிவித்து வரும் பலரும் மீண்டும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


News: https://www.jvpnews.com
Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி