இலத்திரனியல் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் தவித்த சம்பந்தன,பொன்சேகா!

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவர்கள் தெரிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது சிலருக்கு இலத்திரனியல் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் போயுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்தவர்கள் தெரிவு குறித்து இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து மஹிந்த தரப்பு வெளிநடப்பு செய்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலருக்கு இலத்திரனியல் கோளாறு காரணமாக இலத்திரனியல் முறையில் வாக்கை செலுத்த முடியாமல் போயுள்ளது.

இதனால் குறிப்பிட்ட சிலர் வாய்மூலம் தமது வாக்கை செலுத்தினர்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி