கூட்டமைப்பு மகிந்தவை ஆதரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது -சுப்பிரமணியன் சுவாமி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமையானது சரியான நடவடிக்கை எனத் பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

கட்சி தாவுபவர்களை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மை என்பது அரசியலமைப்பிற்கு உகந்ததாக இருந்தாலும் ஜனநாயகத்தின் தார்மீகத்தினை வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்தவுக்கு ஆதரவளித்திருந்தால் அது சிறந்த விடயமாக அமைந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி தமிழ் தலைவர்கள் தற்கொலை செய்யும் சுபாவத்தை உடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி