சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் போராட்டம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் எடுத்துக்கொண்ட முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டததாக ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் இன்று அலரிமளிகையில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள அரசியல் யாப்புக்கு விரோதமான செயற்பாடுகளை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார். எனவே அவரது சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் எமது போராட்டத்தை ஆரம்பிப்போம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் எடுத்துக்கொண்ட முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறினார்.


News: https://www.jvpnews.com

Share on Google Plus

About Editer

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி