காலநிலை – மழை அதிகரிக்கும்

அடுத்த சில நாட்களில் தென் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடும். அது இலங்கையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தொகுதியின் காரணமாக நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய நிலைமை, குறிப்பாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவிலிருந்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு கடற்பரப்புகளில் மழையுடன் கூடிய நிலைமை நாளை இரவிலிருந்து மேலும் அதிகரிக்ககூடும்.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வளையில் பனிமூட்டம் காணப்படலாம் .

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு வரையான திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும்வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Share on Google Plus

About Admin

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி